சிம்புவிற்கு வில்லனாக சுதீப் நடிப்பதால் இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகர் சிம்பு நடிப்பில் “மாநாடு” படம் எடுக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்காததால் கோபமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தையே டிராப் செய்வதாக அறிவித்தார்.இயக்குனர் வெங்கட் பிரபுவும்,வெப் சீரிஸ் ஒன்றை இயக்க சென்றார்.
இந்நிலையில் சிம்புக்கும் ,சுரேஷ் காமாட்சிக்கும் இடையே இருந்த மன வருத்தங்களை சிலர் முன்னின்று போக்கினர்.இதையடுத்து மீண்டும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.வரும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் மாநாடு படத்தை தொடங்குகின்றனர்.அதற்காக சிம்பு உடம்பை தீவிரமாக தயார்ப்படுத்தி வருகிறார்.
இதற்காக இப்படத்தில் சிம்புவிற்கு இணையான வில்லன் கேரக்டர் ஒன்று உள்ளது.அதில் நடிகர் அரவிந்தசாமியை நடிக்க வைக்க முயற்சித்தனர்.ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.அதனால் நான் ஈ ,படத்தில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப்பை வில்லனாக நடிக்க பேசி முடித்தனர்.இப்படத்தில் நடிகர் சிம்புவும் ,சுதீப்பும் மோதும் சண்டை காட்சிகள் படத்திற்கு பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.