Categories
தேசிய செய்திகள்

மக்களே…. தொடர் இருமல் இருக்கா?… உடனே இப்படி பண்ணுங்க…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!!

கொரோனா தொற்று சிகிச்சை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, லேசான கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் வீட்டு தனிமையில் இருந்து கொள்ள அனுமதிக்கலாம். இதையடுத்து மிதமான பாதிப்பு இருப்பவர்களை கொரோனா வார்டுகளிலும், தீவிர பாதிப்பு உள்ளவர்களை அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்க வேண்டும்.

மூச்சுத் திணறல் இல்லாதவர்கள் லேசான பாதிப்பு உடையவர்களாக கருத வேண்டும். மேலும் அதிக காய்ச்சல், 5 நாட்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், சுவாச பிரச்னை இருப்பவர்கள்மருத்துவரை  அணுக வேண்டும். ஆக்சிஜன் அளவு 90-93 சதவீதம் குறைந்து மூச்சுத் திணறல் இருப்பவர்களை மிதமான பாதிப்பு உடையவர்களாக கருத வேண்டும்.

அதேபோன்று குறைவான சுவாச விகிதம் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் உடல் ஆக்ஸிஜன் அளவு 90க்கு கீழ் குறைந்தால் கடுமையான பாதிப்பாக கருத வேண்டும். அதன்பின் 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால், நோயாளிகளுக்கு காச நோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதனிடையில் அதிகளவு ஸ்டீராய்டுகளை பயன்படுத்தும் போது கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |