Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் பதுக்கிய பொருள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக காரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் 120 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தும்பக்கோடு பகுதியில் வசிக்கும் ஜெபிஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெபிஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 120 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |