தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷோபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பிராங்கிளின் புதிய வீடு கட்டுவதற்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிராங்கிளின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிராங்கிளினின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.