சமந்தா மற்றும் நடிகர் நாக சைத்தன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கை வேண்டாம் என்று விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டனர். அறிவிப்பு வெளியாகி 4 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்களை பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரையில் எனக்கு சரியான ஜோடி சமந்தா தான். அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகும் என்று கூறியிருந்தார். தொடர்ந்து சமந்தா நடித்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் சூப்பராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.