Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள் விளையாட்டு

பிரபலங்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்…!!

பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் இந்திய பிரபலங்களின் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இதில் நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டு தோறும் மக்களை கவர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுவருகிறது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Image result for விராட் கோலி ஸ்டைல் போட்டோஸ்

 

வருமானம் புகழ் மற்றும் சமூக வலைத்தளத்தில் உள்ள வரவேற்பை கணக்கிட்டு 100 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.  அவரை தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் அக்க்ஷய்குமார், சல்மான்கான், அமிதாப் பச்சன் ஆகியோர்  அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர். தோனி 5-வது இடத்தில் உள்ளார்.  தமிழக பிரபலங்களில் நடிகர் ரஜினிகாந்த் 13-வது இடத்தை பிடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

Image result for பிரபலங்களின் 100 பேரின் பட்டியலை

நடிகர் விஜய்க்கு 47-வது இடமும், நடிகர் அஜித்குமார்க்கு 52-வது இடமும், இயக்குனர் சங்கர்ருக்கு 55-வது இடமும் கிடைத்துள்ளது.  மேலும் அரசியல் வாதி ஆகியுள்ள நடிகர் கமலுக்கு இந்த வரிசையில் 56-வது இடமே கிடைத்தது.

 

Categories

Tech |