Categories
மாநில செய்திகள்

கடைகளில் இனி சிசிடிவி கேமரா இல்லாவிட்டால் உரிமம் ரத்து…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த குற்றச் செயல்களை தடுப்பதற்கும், குற்றம் நடந்தால் அதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்காகவும், சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளது. நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சாலை சந்திப்புகள், பொதுமக்கள் வந்து செல்லும் அரசு, தனியார் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்த உத்தரவை மையமாகக்கொண்டு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை விரைந்து செய்யுமாறு கடைக்காரர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். அதில் முதல் கட்டமாக மாநகரில் இருக்கும் கடை, வணிக நிறுவனம், வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்து கேமரா இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கேமரா இல்லையெனில் எத்தனை கேமராக்கள் தேவைப்படுகிறது என்பதை கணக்கெடுத்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறை கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின் பேரில், கடைகடையாக காவல்துறையினர் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். கேமரா பொருத்தப்பட கடைக்காரர்களுக்கு கடை உரிமம் ரத்து செய்ய மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்படும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் அளித்துள்ளனர். இதன்மூலம் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி விரைவாக நடக்கும் என்றும், குற்ற சம்பவங்களில் துப்பு துலக்குதல் எளிதாகும் என்றும், காவல்துறையினர் நம்புகின்றனர்.

Categories

Tech |