Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து…. ஆப்பு வைத்த போக்குவரத்துத்துறை….!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட செல்வது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தமுறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்பாத அவர்களின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து தொலை தூர இடங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்திருந்தார்.

மேலும் இதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் குழுக்களின் கண்காணிப்பில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கடந்த 6 நாட்களில் 250 ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக குறிப்பிட்ட ஆம்னி பேருந்துகள் நிறுவனங்களிடமிருந்து 5.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மறுபடியும் நகரங்களுக்கு திரும்பும்போது, அவர்களிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகள் 1800 425 6151 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |