Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க!.. அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படி வழங்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அந்த தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது தொற்று குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விலைவாசி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அது என்னவென்றால், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மெண்ட் பேக்டரை உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் உயரும். மேலும் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக இருக்கிறது.

இந்நிலையில் பிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்தினால் அடிப்படை சம்பளம் 20,000 ரூபாயாக உயரும் என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது பற்றி அரசு ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் விரைவில் அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வருடந்தோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுபற்றி அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் என்றே நாம் கூறலாம். ஏனென்றால், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31% உள்ளது.

Categories

Tech |