Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 , 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. திருப்புதல் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது.

அதன் பின்னர் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்று வந்தது. வழக்கம்போல பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் 10,11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள.து மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 19 தொடங்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடக்க முடியாத இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றன இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் திருப்புதல் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளார்.

இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் மூலம் முன்னதாகவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி வினாத்தாள் தயார் செய்து மாணவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும். மேலும் மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதி வினாத்தாளை மீண்டும் வாட்ஸ்அப்பில் அப்லோட் செய்ய வேண்டும். இதனால் மாணவர்களுக்கு தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும் என்று அதிகாரி கீதா கூறியுள்ளார்.

Categories

Tech |