டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார், வள்ளுவர் உடைய அடையாளம் அவர் மயிலாப்பூரில் இருக்கக்கூடிய திருவள்ளுவருடைய திருக்கோவில், நாங்கள் கடவுளாக நினைக்கிறோம், தெய்வப்புலவர் அவர், நெற்றியில் திருநீறு அணிந்து நாங்கள் வணங்கக்கூடிய கடவுளாக இருக்கக் கூடியவருக்கு அடையாளங்களை அழிக்கக்கூடிய வேலைகளை என்ன என்று சொல்வது ?
வள்ளுவனுக்கு கோவில் இருக்குதா ? இல்லையா, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கா இல்லையா ? அந்த தெய்வ புலவரை இயேசு மதத்திற்கு மாற்றுவதற்கு, ஏசுநாதரிடம் இருந்து அவர் ஞானஸ்தானம் பெற்றார் என்று திருக்குறளையும், திருவள்ளுவரையும் கிறிஸ்துவமயமாக்கக்கூடிய அதற்கான முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்க்கு பெயர் தான் திராவிடத்தனம் என்று சொல்கிறோம், திராவிட திருட்டுத்தனம் என்று நாங்கள் சொல்கிறோம்.
எங்கள் வள்ளுவருக்கு நெற்றில் திருநீர் இல்லை, எங்கள் அவ்வை பட்டியின் நெற்றியில் திலகம் இல்லை, ஆண்டாளை அவமதித்தார்கள், பாரதியாரை அவமதித்தார்கள் குறிப்பிட்டு இந்து மதத்தில் நம்பிக்கை தெய்வங்களாக இருக்கக்கூடிய, நம்பிக்கை வழிகாட்டிகளாக இருக்கக்கூடியவர்களை இவர்கள் அடையாள அழிப்பு செய்யக்கூடிய வேலையை இந்து மதத்திற்கு மட்டும் செய்கிறார்களோ, அதைத்தான் நாங்கள் தவறு என்று சொல்கிறோம் என விமர்சித்தார்.