சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா மனித இனங்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கான கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் பிரேசில் மூன்றாவது இடத்திலும், இத்தாலி 8-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.