மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மோடியை நிரந்தர பிரதமர் என்று கூறியிருந்தார். ஆனால் இங்கு எதுவுமே நிரந்தரம் கிடையாது.
அதாவது அதிமுகவினர் ஏற்கனவே நிரந்தரம் என்று கூறியது தற்போது எங்கே ? என்று வினவினார். மேலும் அந்த நிரந்தரம் ( ஜெயலலிதா ) தற்போது நிரந்தரம் இல்லாமலேயே போனது. அதேபோல் தான் முன்பு பிரதமரை “மோடி எங்கள் டாடி” என்று கூறியவர்கள் இப்போது நிரந்தர பிரதமர் என்று பேசுகிறார்கள். எனவே எதுவுமே நிரந்தரம் கிடையாது என்று கார்த்தி சிதம்பரம் பரபரப்பாக பேசியுள்ளார்.