அதிமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சர் வேலுமணியை மேடையில் வைத்து கொண்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசிய நிகழ்வுகளை கண்டித்து புகழேந்தி விமர்சனம் செய்தார். பிரபல தனியார் யூடியூப் சேன்னலில் பேசிய அவர், இந்த தகவல் அங்கிருந்தவரால் அன்றைய தினமே எனக்கு சொல்லப்பட்டது. நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் வேலுமணியின் பி.ஏ. ராதா அவரிடம் கேட்டேன்.
ஏன் இவர் அசிங்கமாக தரக்குறைவாக பேசிக்கொண்டிருக்கிறார். என்னிடம் கூட சொல்லியிருந்தால் மீட்டிங்கு வந்திருப்பேனே, இப்படி அநாகரிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையே, நான் வந்து நல்லா பேசி இருப்பேனே என்று சொன்னேன். இன்னொரு பெரிய கூட்டம் போடுகிறோம் அண்ணா என்று சொன்னார். எனக்கு செய்திகள் வருகிறது ஏதோ கன்னாபின்னா பேசுகிறார் என்று…
இவர்கள் பேசுவதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும், அதை இப்போது வலைதளங்களில் பார்க்கும்போதுதான் தெரிகிறது உன்னை கொன்னுடுவேன், தீத்திருவேன், விரட்டுவேன் இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் எப்படி சரியாக இருக்கும். இப்படிப்பட்ட மனிதருக்கு பெயில், அதை வந்து சரியாக சொல்லாததால் தான் நீதிமன்றத்தில் பெயில் கொடுத்தார்கள்.
அவர்கள் பேசுகின்ற முறை சரியில்லை, இதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இதுதான் தேர்தல் ஆணையத்தில் சொல்லி கொடுத்தார்களா, இதை தான் உச்சநீதிமன்றம் அட்வைஸ் பண்ணுச்சா, இதற்கெல்லாம் புறம்பாக பேசுகிறார் ஜனநாயகத்திற்கு எதிர்ப்பா ? ஜனநாயகத்தை கொன்று, கேலிக்கூத்தான ஒரு செயல் இல்லையா. இப்போது நான் அதை ஞாபகப்படுத்துகிறேன் என்ன தப்பு இருக்கு,
அன்னைக்கு நடந்தது. பத்து வருடத்திற்கு முன்னாடி ஒருவன் கொலை பண்ணிட்டான், ஆளே கிடைக்கல இன்னைக்கு தான் கிடைக்கிறான் விட்டுவிட முடியுமா. அப்போ நான்கு வருடத்திற்கு முன்னால் நடந்த கொடநாடு விஷயத்தை இப்ப ஏன் ஆராய்ச்சி பண்ணனும், தேவை இல்லையே, அதுதான நியாயம்.
நான்கு வருடத்திற்கு முன்னாடி நடந்தது கொடநாடு. இன்றைக்கு அதை விசாரிக்கலையா, கிரிமினலுக்கு எந்த தடையும் இல்லை, மூன்று வருடம் ஒரு சிவில் கேஸ் போடுவதற்கு இருக்கு என்கின்ற மாதிரி கிரிமினல் எல்லாம் எந்த ஒரு அளவிடும் கிடையாது என தெரிவித்தார்.