நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தமிழக அலங்கார ஊர்திக்கு குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பில் பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மத்திய அரசு தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே குடியரசு தினவிழாவை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும்.
அதேபோல் பாஜக அரசு தமிழ் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறது. எனவே முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு மட்டும் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆலோசித்து கடுமையான முடிவினை எடுக்க வேண்டும் என்று கூறி பரபரப்பாக பேசியுள்ளார்.