சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் ரொக்கப்பணம், துணிகளை வீட்டின் பணியாளர் தனுஷ் (19) திருடியதாக நிக்கிகல்ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை அடுத்து திருப்பூரில் பதுங்கியிருந்த தனுஷை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நாய் முடியை ட்ரிம் செய்யும் கருவி, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
Categories