Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து…. உளவுத்துறை எச்சரிக்கை…. பரபரப்பு தகவல்….!!!!

குடியரசு தினம் அன்று பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதிலும் ஜனவரி 26-ம் தேதி 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பாகிஸ்தான், காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினால் பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறை அனுப்பிய 9 பக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, குடியரசு தினவிழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |