Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தந்தையை பின் தொடர்ந்து சென்ற சகோதரர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் பாண்டி-சுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவிஸ் பாண்டி, வித்திஸ் பாண்டி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் 2 குழந்தைகளும் பாண்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பாண்டி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை பார்த்த சகோதரர்கள் தந்தையை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது தனது 2 மகன்களையும் வீட்டிற்கு போக சொல்லி விட்டு பாண்டி குளித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து தனது மகன்கள் குறித்து கேட்ட போது, அவர்கள் வீட்டிற்கு வரவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் பாண்டி தனது மகன்களை அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளார். இதற்கிடையில் குளத்தில் சிறுவர்களின் சடலம் மிதந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்தனரா அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை குளத்தில் வீசி சென்றனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |