Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 விரைவு ரயில்களில் மீண்டும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை சென்ட்ரல் கேஎஸ்ஆா் பெங்களுரூ விரைவு ரயில் உட்பட 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் (முன்பதிவில்லாத பெட்டிகள்) மீண்டும் இணைக்கப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (12607), சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரயில் (12609), எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு அதிவிரைவு ரயில்(12678) போன்ற 3 ரயில்களில் தலா 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் சோ்க்கப்படவுள்ளது. இந்த முன்பதிவு இல்லா பெட்டிகள் சோ்ப்பு ஜனவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தூத்துக்குடி-மைசூரு தினசரி விரைவு ரயிலில் (16235) 2 முன்பதிவு இல்லா பெட்டிகள் ஜனவரி 21ஆம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல்-விஜயவாடா அதிவிரைவு ரயிலில் (12712) 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஜனவரி 20ஆம் தேதி முதல் சோ்க்கப்பட இருக்கிறது. மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயில் (17408), கோயம்புத்தூா் -திருப்பதி அதிவிரைவு ரயில் (22618), சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில் (16203) உட்பட 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இருக்கை வசதி பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளது.

Categories

Tech |