Categories
மாநில செய்திகள்

எல்லோருக்கும் நகைக்கடன் தள்ளுபடி…. என்ன முடிவு எடுக்கப் போகிறார் ஸ்டாலின்?….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது அதன்படி 5 சவரன் வரை உள்ள நகைகளை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். சிலர் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது. இதனால் கூட்டுறவு சங்க நகைகளை ஆய்வு செய்யுமாறும், அந்த பணியை விரைவில் முடிக்குமாறும், கூட்டுறவு துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவகாசம் முடிந்தும் ஆய்வு முடியவில்லை. தங்க நகைகளை திரும்ப வழங்கக்கோரி கூட்டுறவு வங்கிகளுக்கு நகைகளை அடமானம் வைத்தவர்கள் சென்றபடி உள்ளனர். மேலும் நகை கடன்களை வழங்குவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு பின்னர் ஏராளமான நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதாவது 5 சவரனுக்கு குறைவாக 2 , 3 பகுதிகளாக பிரித்து வைத்துள்ளவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் 40 கிராமுக்கு மேல் 1 கிராம் அதிகமாக நகை அடமானம் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று திமுக அரசு தற்போது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எல்லாருக்கும் கடன் தள்ளுபடி வழங்குவது நிர்வாகரீதியாக சரியாக இருக்காது என்று அரசு கருதினால், கடன் தள்ளுபடி குறித்து அரசு தற்போது விதிக்கும் நிபந்தனைகளை திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் போது, தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கூறாமல் கடன் தள்ளுபடி தற்போது வந்து ஏராளமான நிபந்தனைகளை போடுவது தேர்தலில் நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகளை வாங்க திமுக கையாண்டது என்றே கூறலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதனால் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி 5 சவரன் நகை கடன் பெற்றுள்ள அனைவருக்கும் தள்ளுபடியை அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காமலிருந்தால் இதனுடைய பாதிப்புகள் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றுள்ள சிலர் எச்சரித்து வருகின்றனர். மேலும் நகை கடன் பெற்ற 48,84,776 பேர் 35,37,693 பேருக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படமாட்டாது என்று கூட்டுறவுத்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டுறவில் கடன் பெற்று தள்ளுபடியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |