Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜினாமா லெட்டரை நீட்டிய பிடிஆர்…. இனி இவருக்கு பதில் இவரா?…. ஸ்டாலின் அதிரடி முடிவு….!!!!

திமுக ஐடி விங் செயலாளராக பணிபுரிந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. மேலும் ஒரு பக்கம் ஐடி விங் இணைச் செயலாளராக மநீமவிலிருந்து வந்த மகேந்திரனை நியமித்தது உள்ளிட்ட விவகாரங்களில் பிடிஆர்க்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் திமுக தரப்பில் பிடிஆர் அரசு வேலைகளில் கவனம் செலுத்துவதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திமுக ஐடி விங் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்காக பல தரப்பினரும் முனைப்பு காட்டி வந்தனர். இந்த நிலையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பணி நியமனம் குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ஐடி விங் செயலாளர் பதவியை பிடிஆர் ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்றை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்டு அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவை அந்த பதவியில் நியமனம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |