திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் பொழுது பணம் மற்றும் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணி கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபடுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சூரிய பிரபை என்ற மூதாட்டி உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பொழுது ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கத்தை எடுத்து மறைத்தது கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது. இதேபோன்று தற்காலிக ஊழியராக சாவித்திரி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பணத்தை திருடி உள்ளனர்.