Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது?…. முதல்வர் சூசகம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்களுக்கு அலுவலகங்களில் இடமில்லை என்றும், பல்வேறு மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அசாம் மாநிலத்தில் ஒரு தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு அலுவலகங்களில் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கவுகாத்தியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு தகவலின்படி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் அலுவலகங்களுக்கு வர விரும்பும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஜனவரி மாதம் 15-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுப்பு எடுப்பவர்களுக்கு விடுப்பு இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |