மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதால் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து’ வந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியில் ஏராளமான மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் 19- க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களை தாக்கியுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த வீரர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாகனேரி கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.