கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதாகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுதாகர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சுதாகர் தனது நண்பர்கள் 3 பேருடன் தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக சுதாகர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இதனை பார்த்த நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு சுதாகரின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் சுதாகரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.