விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் ரப்பர் விவசாயியான தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் தினேஷ்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷ் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.