Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த மகன்…. அடித்து கொன்ற தந்தை…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

மது போதையில் தகராறு செய்த மகனை தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலோட்டு விளை பகுதியில் செல்லன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். வழக்கம் போல் தகராறு ஏற்பட்ட போது குமார் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது கோபமடைந்த செல்லன் கட்டையால் குமாரின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்லனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |