Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க!…. தமிழக காவலர்களுக்கு சூப்பர் நியூஸ்… முதல்வர் ஸ்டாலின் கொடுத்த செம சர்ப்ரைஸ்….!!!!

காவல்துறை என்பது ஒரு மகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளை பாதுகாக்கவும், அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இதில் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது, தமிழக காவல்துறையானது குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும், மட்டும் இல்லாமல் குற்றங்கள் நடக்காத ஒரு சூழ்நிலையை உருவாக்கும் ஒரு துறையாக இருக்க வேண்டும் என்பதில் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் அரசு உறுதியாக இருக்கிறது.

மேலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளம், பொருளாதார வளர்ச்சி, அமைதியான சூழல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை காவல்துறை தனது முயற்சியை தொடர்ந்து பின்வாங்காமல் செய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி 2021- ஆம் வருடம் அன்று சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், காவலர் பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் வகையில் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தற்போது புதிய காவல் ஆணையம் ஒன்றை அமைக்கவும், அந்த காவல் ஆணையத்திற்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சி.டி.செல்வம் அவர்களை தலைவராகவும், அலாவுதீன் இ.ஆ.ப. முனைவர் கே. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. மனநல மருத்துவர் சி. ராமசுப்பிரமணியம், மேனாள் பேராசிரியர் முனைவர் நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை கூடுதல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால், அவர்களை உறுப்பினர்- செயலாளராகவும் நியமனம் செய்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த ஆணையம் காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை உன்னிப்பாக ஆய்வு செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்கும். காவல்துறையின் செயல்பாடுகளை சிறப்பாக செய்வதற்கும் இணையவழி குற்றங்களை தடுத்திட சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டும் இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழியாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |