Categories
தேசிய செய்திகள்

உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?…. கொரோனாவால் உயிரிழந்த தாய்…. உடலை வாங்க மறுத்த மகள்….!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் பெங்களூருவில் விமானப்படையில் பணியாற்றினார். இவர்களுக்கு மதுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பணியில் இருந்தபோது, பாக்கியலட்சுமி கணவர் இறந்துள்ளார். அதனால் பாக்கியலட்சுமிக்கு விமானப்படையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் மகளுக்கு ஒருவருடன் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்.

முன்னதாக, பாக்கியலட்சுமிக்கும், மதுஸ்ரீக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் பேசுவதை தவிர்த்து விட்டனர். இதனால் கடந்த 10 வருடங்களாக தாயும், மகளும் பேசாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாக்கியலட்சுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பாக்கியலட்சுமியை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் இதுபற்றி மகள் மதுஸ்ரீயிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் மதுஸ்ரீ அவரிடம் சரியாக பேசாமல் இணைப்பை துண்டித்துள்ளார். இந்நிலையில் பாக்கியலட்சுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. மேலும் பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்கியலட்சுமி இறந்ததை பற்றி மதுஸ்ரீக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு வரவில்லை. இதையடுத்து காவல்துறையினர் மதுஸ்ரீயை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி மருத்துவமனைக்கு வரவழைத்தனர். அதன்பின்னர் பாக்யலக்ஷ்மியின் உடல் மதுஸ்ரீயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், மயானத்தில் பாக்கியலட்சுமி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மகள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. இதுபற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெத்த தாய் இறந்ததற்கு கவலைப்படாமல் இருக்கும் மதுஸ்ரீயின் செயலுக்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |