Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ கண்ணாடி உடைப்பு…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆட்டோ கண்ணாடியை உடைத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எப்போதும் வென்றான் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்க முத்துவேல் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தங்க முத்துவேலுக்கு சொந்தமான ஆட்டோவில் அவரது உறவினரான சிவக்குமார் அமர்ந்துகொண்டு மது அருந்தியுள்ளார். இதனை பார்த்த தங்க முத்துவேல் சிவக்குமாரை சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சிவகுமார் கடந்த 13-ஆம் தேதி தங்க முத்துவேலிடம் தகராறு செய்து அவரை கையால் தாக்கி, ஆட்டோ கண்ணாடியை உடைத்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தங்க முத்துவேல் எப்போதும்வென்றான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் சிவக்குமார் மீது எப்போதும் வென்றான் காவல்நிலையத்தில் கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |