செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, எவ்வளவு புகார் நாங்கள் கொடுக்கிறோம், எவ்வளவு ஆர்டர்ஸ் இருக்கு தெரியுமா. அப்போ ஓட்டுக்காக நீங்கள் சிறுபான்மையினரை தாஜா செய்யும் போலி மதச் சார்பின்மை அப்படி இல்லை, நான் சொல்கிறேன்…. தமிழகத்தில் ஒரு மிக மோசமான மதவாத கட்சி இருக்கிறது என்று சொன்னால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான். அதனால நியாயமா நடப்பது ஒரு அரசாங்கத்தினுடைய முதலமைச்சருடைய கடமை.
அதிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தவறி விட்டார் என்பதை நான் சொல்லவேண்டும். இல்ல அந்த மாதிரி நிராகரிப்பு எல்லாம் பண்ண மாட்டாங்க. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து அவருக்கு மரியாதை செய்வது குறித்து காங்கிரஸில் இருந்த பயின்ற மம்தா பேனர்ஜிக்கு ஒன்றும் தெரியாது. என்னென்றால் காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு சில தலைவர்களை விட்டால் வேறு யாரும் சுதந்திர போராட்டத்திற்கு ஈடுபட்டார்கள், போராடினார்கள் என்று தெரியாது.
அதனால் தெரியாதவர்களுக்கு அத பத்தி அவர்கள் பேசக்கூடாது. யாரையும், எதையும் நிராகரிக்க மாட்டார்கள். இல்லங்க தமிழ்நாட்டுல யார் நடத்துறாங்க ? நான் என்ன சொல்றேன் எதுவா இருந்தாலும் தமிழ்நாட்டுல அந்த அணிவகுப்பை யாரு நடத்துறாங்க? அப்ப நீங்க அரசை கேளுங்க. இந்த முறை சில காரணங்களுக்காக… பல மாநிலங்கள் பங்கேற்க முடியாது என்று பல காரணங்கள் கொரோனா காரணங்களாக இருக்கலாம். இந்தமுறை கொரோனாவினால் பல கட்டுபாடுகள் கொடுத்திருக்கிறார்கள். பல கட்டுபாடுகள் குடியரசு தின அணிவகுப்பில் செஞ்சிருக்காங்க. என்ன காரணங்களுக்காக சொல்லி இருக்கிறார்கள் என்று நான் பார்க்க வேண்டும் ?
தவிர இதை ஏன் சொல்கிறோம் என்றால் ஒரு 4, 5 தலைவர்களை தவிர இதுநாள் வரையிலும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் என்று 4 பேரை தவிர வேறு யாருமே காங்கிரஸ்காரர்கள் முன்னால் கொண்டு வந்தது இல்லை. பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் மட்டுமல்ல நம்முடைய பிரதமர் உள்பட அனைவருமே தினம்தோறும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெரும் தலைவர்கள் ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்ற ஒரே கட்சி பாஜக தான். அதனால் இவர்களுக்கு திடீர் பாசம் எல்லாம் வந்து என்ன ஏது என்று கேள்வி கேட்க வேண்டிய தகுதியே கிடையாது. சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழர்களின் பெயர்களும் இடம்பெறும் என தெரிவித்தார்.