வீட்டிற்கு அருகில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாத்தாம்பாடி பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துவிட்டனர். அதன் பிறகு மலைப்பாம்பு வனத்துறையினர் மூலம் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.