தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் 10, 11ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 செய்முறைத் தேர்வு முறையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதே சமயம் தனித்தேர்வர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அந்த வகையில் 10ம் வகுப்பு துணைத் தேர்வு கடந்த செப்டம்பர் 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் ஜனவரி 21ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.