Categories
மாநில செய்திகள்

உஷார்!… ஆசிரியர்களுக்கு திடீர் எச்சரிக்கை…. கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும் பல செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் நிலை பற்றிய ஆய்வுக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 15 -ஆம் தேதி அன்று தொடங்கி மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் மண்டல ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

அந்த ஆய்வில் பல ஆசிரியர்கள் முறையாக பாடக்குறிப்பு எழுதாமலிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக குறிப்பேடு எழுதாமல் இருக்கின்றனர். சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த கூட தெரியவில்லை. மேலும் ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பாடம் நடத்தி வருகின்றனர்.

இதை மாற்றி அந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச அறிவுறுத்தப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல் பாட குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் வளாகங்களை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |