தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியபட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் குமார் தனது நண்பரான ரிச்சர்டு என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் குலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது தூண்டிலில் மீன்கள் சிக்கியதால் உற்சாகத்தில் 2 பேரும் தூண்டிலை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவர்கள் தண்ணீருக்குள் தவறி விழுந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அரசப்பிள்ளைபட்டி பகுதியில் கருப்பனின் மகனான தங்கப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தங்கப்பாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.