Categories
தேசிய செய்திகள்

கூகுளில் கெட்டிமேளம்…. சோமேட்டோவில் விருந்து…. இது கொரோனா கல்யாணம்….!!!!!

மேற்கு வங்கத்தில் ஒரு தம்பதியினர் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலம் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 450 விருந்தினர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வரும் ஜனவரி 24ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்துள்ள சந்தீபன் சர்க்கார், அதிதி தாஸ் இருவரும் திருமண மண்டபத்தையோ, வாகனத்தையோ ஏற்பாடு செய்யவில்லை.

அவற்றிற்கு பதிலாக கூகுள் மீட் மூலமாக தங்கள் விருந்தினர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கான திருமண விருந்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக சொமேட்டோ செயலியைப் பயன்படுத்தி அவர்களுக்கு உணவு வழங்கவும்  ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் சந்தீப் சர்கார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கிட்டத்தட்ட 4 நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த கசப்பான அனுபவம் தன்னுடைய விருந்தினர்களுக்கு ஏற்படக்கூடாது என்று அவர் நினைத்தார். எனவே தன்னுடைய திருமணத்தை எளிமையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |