Categories
தேசிய செய்திகள்

“தைப்பூச திருவிழா”…. சாமியார் மீது ஊற்றப்பட்ட மிளகாய் கரைசல்…. பக்தர்கள் செய்த செயல்….!!!!

தமிழகம் முழுவதிலும் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன்  சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தடை உத்தரவையும் மீறி ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கிரிவலப்பாதையில் காவடியுடன் வலம் வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதேபோன்று புதுச்சேரி அருகே உள்ள செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியார் மீது மிளகாய் கரைசலை ஊற்றி பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். இதனையடுத்து அந்த அபிஷேக கரைசலை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு பாட்டில்களில் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |