உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி என பாஜக அறிவித்துள்ளது.
டெல்லியில் உத்தரபிரதேச தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை தேர்தல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் தாக்கூர், அப்னா தள் கட்சி சார்பாக அனுப்ரியா பட்டேல், நிஷாத் கட்சி சார்பாக சஞ்சய் நிஷாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
இந்த கூட்டத்திற்கு பிறகு அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தார்.. மேலும் அவர் பாஜக தலைமையிலான கூட்டணி 403 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், இந்த கூட்டணி உத்தரபிரதேச மாநிலத்தில் அனைத்து சட்டசபை தொகுதியிலும் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்..
விரைவில் அப்னா தள் கட்சிக்கு எத்தனை இடங்கள்? நிஷாத் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று பாரதிய ஜனதா வெளியிடும் என எதிர்பார்க்கலாம்..