Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மேட்டு காளிங்கராயநல்லூர் கிராமத்தில் சாந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வசிஷ்டபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இருக்கும் வளைவில் திரும்பிய போது சாந்தப்பனின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாந்தப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சாந்தப்பனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |