Categories
உலக செய்திகள்

கொரோனாவால் சீனர்களை வெறுக்கும் அமெரிக்கர்கள்…. கொலை செய்யப்பட்ட சீனப்பெண்…!!!

நியூயார்க் நகர தண்டவாளத்தில், தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சீன பெண்ணின் நினைவஞ்சலிக்கு வந்தவர்கள் சீன மக்களை வெறுக்கும் மனப்பான்மையை கைவிடுங்கள் என்று வலியுறுத்தினர்.

கொரோனா தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து அமெரிக்க மக்களுக்கு, சீன மக்கள் மீது இருக்கும் வெறுப்பு பல மடங்காக அதிகரித்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் சீன வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதுடைய மிச்சல் கோ என்ற பெண், காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்வதற்காக நியூயார்க் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

அப்போது, ஒரு நபர் அந்த பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பில் 61 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர், தான் சீன மக்கள் மீது இருந்த வெறுப்பு காரணமாக அந்த பெண்ணை கொலை செய்யவில்லை என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |