Categories
உலக செய்திகள்

5G மொபைல் சேவையால் பிரச்சனை…. அமெரிக்க விமானங்கள் ரத்து… அதிரடியாக அறிவித்த துபாய்…!!!

அமெரிக்க நாட்டில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் புதிய சி பேண்ட் 5-ஜி சேவை விமானங்களின் பயண உயரத்தை காண்பிக்கும் அல்டி மீட்டர் கருவிக்கு பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, மியாமி, ஆர்லண்டோ, டல்லாஸ், பாஸ்டன் மற்றும் சியாட்டில் போன்ற பல நகர்களின் விமான சேவை இதன் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக துபாய்க்குரிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

எனினும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் விமானங்கள் செயல்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், விமான பயணத்தில் தொந்தரவு  ஏற்படுவதை குறைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் 5ஜி சேவையை நிறுவ  அமெரிக்க அரசு தீர்மானித்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Categories

Tech |