Categories
தேசிய செய்திகள்

தேர்வு ஒத்திவைப்பு…. சற்றுமுன் தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோணா பரவல் காரணமாக வருகிற 29-ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி 5ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 1 முதல் முனைவர் பட்டம் பெறும் வரை மத்திய அரசு உதவித்தொகை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |