நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா, தனுஷ் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போதெல்லாம் அப்பா ரஜினி தான் ஐஸ்வர்யாவிடம் இரண்டு பிள்ளைகள் ஆகிவிட்டது பார்த்து போம்மா என்று கூறியுள்ளார்.
தனது அப்பாவின் வார்த்தைக்கு மதிப்பு அளித்து ஐஸ்வர்யாவும் ஆறு ஆண்டு காலமாக அமைதியாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே ஏதாவது ஒரு நடிகையுடன் சேர்த்து தனுஷின் பெயர் கிசுகிசுக்களில் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் ஐஸ்வர்யாவும், ரஜினியும் முதலில் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளனர்.
பின்னர் ஐஸ்வர்யாக்கு அது என்ன தனுஷ் பெயர் மட்டும் அடிக்கடி ஏதாவது ஒரு நடிகையுடன் சேர்ந்து வருகிறது ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் குறித்து நடிகை ஒருவரிடம் கோபமாக விசாரித்துள்ளார். பின்னர் அந்த நடிகை ஐஸ்வர்யா இப்படி என்னிடம் பேசினார் என்று தனுஷிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் நீ எப்படி என்னை பற்றி இன்டஸ்ட்ரியில் இருப்பவர்களிடம் விசாரிக்கலாம் ? என்று ஐஸ்வர்யாவிடம் சீறியுள்ளார். இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் நாளடைவில் பூதாகரமாக வெடித்து தனுஷ் ஐஸ்வர்யாவை தற்போது விவாகரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.