Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாரசந்தையில் திடீர் ஆய்வு…. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்…. வியாபாரிகளுக்கு எச்சரிக்கை….!!

வாரசந்தையில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் முககவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். இந்நிலையில் சந்தையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து முக கவசசத்தின் அவசியம் குறித்து வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து முக கவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நகராட்சி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |