கனடா நாட்டில் கடுமையான பனிப்புயல் வீசி நாட்டை மொத்தமாக புரட்டிப் போட்டிருக்கிறது.
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கடும் பனிப்புயல் வீசியதில் அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் முழுக்க, பனிக் குவிந்து காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்பாராமல் ஏற்பட்ட பனிப்புயலால் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிக் கொட்டியிருக்கிறது என்று ரொறன்ரோ நகரின் மேயர் கூறியிருக்கிறார். வானிலை சிறிது சீரானவுடன் சாலைகளில் கிடக்கும் பனி குவியல்கள் நீக்கப்பட்டது.