‘படையப்பா’ படத்திற்கு ரம்யா கிருஷ்னண் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”படையப்பா”.
இந்தப் படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து ரம்யா கிருஷ்ணன் அசத்தியிருப்பார். இந்நிலையில், இந்த படத்திற்கு ரம்யா கிருஷ்னண் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிப்பதற்கு இவர் 11 லட்சம் சம்பளமாக வாங்கினார் என கூறப்படுகிறது.