Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடுதியில் தங்கிய கொள்ளை கும்பல்…. வளைத்து பிடித்த போலீசார்…. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்….!!

தனியார் விடுதியில் தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அறை எடுத்து தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் காவல்துறையினர் உடனடியாக தனியார் விடுதிக்கு சென்று விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களான தேவகோட்டை சேர்ந்த பூமி, விஸ்வநாதன், காரைக்குடியை சேர்ந்த சண்முகநாதன், மனோஜ் குமார், இலுப்பக்குடி மாத்தூர், நிரோஜ், நிதீஷ்குமார், சிவனேசன் மற்றும் 17 வயது சிறுவன்உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்த கத்தி, வீச்சருவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கைதான பூமி மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்த நிலையில் கைதானவர்களிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |