Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட் பிரபு & யுவன் கூட்டணி…. ஏன் இந்த திடீர் முடிவு?…. திரையுலகில் அதிர்ச்சி….!!!!

“சென்னை 28” என்ற படத்தில் தொடங்கிய வெங்கட் பிரபு மற்றும் யுவன் கூட்டணி கோவா, மங்காத்தா, சரோஜா, மாநாடு என அடுத்தடுத்து தொடர்ந்தது. இதற்கிடையே யுவன் இல்லாமல் பிரேம்ஜி மட்டும் வெங்கட் பிரபு இயக்கிய ‘பார்ட்டி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆனால் அந்த படம் திரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படமான “மன்மதலீலை” திரைப்படத்துக்கு யுவன் இசையமைக்காமல் பிரேம்ஜி இசையமைப்பாளரானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடைசி படமான “மாநாடு” திரைப்படத்தில் கூட பின்னணி இசையில் யுவன் வேற லெவலில் தெறிக்கவிட்டிருப்பார். மேலும் பல காட்சிகளையும் இவரின் இசை பின்னணி தூக்கி நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அப்படி இருக்கும் போது இவர்கள் கூட்டணி திடீரென பிரிந்ததால் திரையுலகில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

Categories

Tech |