குடியரசு தின விழாவில் தமிழக வீரர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடியரசு தினவிழாவில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டமானது நடைபெற்றது.
மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, நகர செயலாளர் ராஜா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் வக்கீல் பகத்சிங், ஜெயராம், அய்யன், ராஜகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.