Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சிக்கன் சூப் வாங்க செய்வோம் …..!!

சிக்கன் சூப்

தேவையான பொருட்கள் :

சிக்கன் (எலும்புடன்)-கால் கிலோ

வெங்காயம்- 1(நறுக்கியது)

தக்காளி-1

இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தழை -ஒரு கைப்பிடி

மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்

உப்பு- தேவைக்கேற்ப

சீரகம்-அரை டீஸ்பூன்

மிளகு தூள்-அரை டீஸ்பூன்

Image result for சிக்கன் சூப்

 

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சீரகம், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.வதங்கிய பின்பு அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பின்னர் மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவும். அதன் பிறகு அதனுடன் கொத்தமல்லி தழையை தூவி சிக்கன் வெந்ததும் இறக்கி சூப்பை வடிகட்டவும்.

Categories

Tech |